ஆசிய திருமதி அழகி பட்டம் வென்று கர்நாடக பெண் டாக்டர் சாதனை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிகிறது


ஆசிய திருமதி அழகி பட்டம் வென்று கர்நாடக பெண் டாக்டர் சாதனை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிகிறது
x
தினத்தந்தி 26 Dec 2019 5:00 AM IST (Updated: 25 Dec 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பெண் டாக்டர் ஒருவர் ஆசிய திருமதி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிகிறது.

தார்வார், 

கர்நாடக பெண் டாக்டர் ஒருவர் ஆசிய திருமதி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிகிறது.

திருமதி அழகிப்போட்டி

மியான்மர் நாட்டில் ஆசிய அளவிலான திருமதி அழகிப்போட்டி நடந்தது. இதில் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டரான சில்பா ஹக்கி கலந்து கொண்டார். இவர் தார்வார் டவுனில் உள்ள எஸ்.டி.எம். மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்னதாக கர்நாடகத்தில் நடந்த திருமதி அழகிப்போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து வெற்றிபெற்றார்.

அப்போது அவரை அனைவரும் ‘‘நடன ராணி’’ என்று புனைப்பெயர் வைத்து அழைத்து பாராட்டினர். இந்த நிலையில் தான் அவர் மியான்மரில் நடந்த ஆசிய அளவிலான திருமதி அழகிப்போட்டியில் பங்கேற்றார்.

முதலிடம் பிடித்தார்

அவர் அழகிப்போட்டி தொடர்பாக பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். குறிப்பாக இந்தியா மற்றும் கர்நாடகத்தின் பாரம்பரியம், கலை, பண்பாடு ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் உடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து அனைவரையும் கவர்ந்தார்.

பரதநாட்டியம், யக்‌ஷகான நடனம், பெல்லு குனிதா நடனம், கர்நாடக பாரம்பரிய உடைகள் ஆகியவற்றை அணிந்து அசத்தினார். இறுதிப்போட்டிக்கு சில்பா ஹக்கியுடன், ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த அழகிகள் தேர்வானார்கள்.

இந்தியாவுக்கு பெருமை

இறுதிப்போட்டியில் கர்நாடகத்தின் காவல் தெய்வமான அஷ்டபூஜ தேவி சக்தியின் வேடம் அணிந்து வந்து ஒய்யாரமாக நடந்து பாராட்டுகளை பெற்றார். இது அனைவரைம் கவர்ந்தது. முடிவில் சில்பா ஹக்கி முதலிடம் பிடித்து வெற்றிபெற்றார். அப்போது அவருக்கு ஆசிய திருமதி அழகிக்கான பட்டம் அணிவித்து கவுரவித்தனர்.

சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு பலரும் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரை தற்போது ‘‘திறமை ராணி’’ என்று அனைவரும் செல்லமாக அழைக்கிறார்கள்.

Next Story