புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது


புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 10:15 PM GMT (Updated: 25 Dec 2019 11:46 PM GMT)

புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரில் 20 அட்டைப்பெட்டிகளில் 960 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் சரவணன் (வயது 37) என்பதும், இந்த மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story