காஞ்சீபுரம் நகரின் வளர்ச்சி குறித்த ஆய்வு பணி


காஞ்சீபுரம் நகரின் வளர்ச்சி குறித்த ஆய்வு பணி
x
தினத்தந்தி 27 Dec 2019 3:15 AM IST (Updated: 27 Dec 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் நகரில், வளர்ச்சி குறித்த பல்வேறு செயல்பாடுகள், உள்ளூர் திட்ட குழுமம் அறிவுறுத்தல்படி நடைபெற்று வருகிறது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகரில் அதிகரிக்கும் முறையற்ற கட்டிடங்களை கண்காணிக்கவும், பாரம்பரிய கோவில் பகுதிகளில் உயரமான கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்கவும், உள்ளூர் திட்ட குழுமம் செயல்படுகிறது. இந்த அமைப்பு, காஞ்சீபுரம் நகரின் அடுத்த கட்ட வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. நகரின் வளர்ச்சி அடுத்த ஆண்டுகளில் எவ்வாறு இருக்க வேண்டும், வாகன நிறுத்தும் வசதி, போக்குவரத்து போன்ற பல்வேறு அரசு திட்டங்களுக்கு, குழுமத்தின் உதவி தேவைப்படும்.

காஞ்சீபுரம் நகரில், உள்ளூர் திட்ட குழுமம், 2002-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது 2020-ம் ஆண்டு வரையிலான திட்ட அறிக்கை, அவர்களிடம் இருந்தது. நகரின் வளர்ச்சி குறித்த பல்வேறு செயல்பாடுகள், உள்ளூர் திட்ட குழுமம் அறிவுறுத்தல்படி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 2020-ம் ஆண்டில், வளர்ச்சி குறித்த அறிக்கை முடிவுக்கு வருவதால், அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சி குறித்த அறிக்கை தயாரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

எனவே, தமிழ்நாடு நகர ஊரமைப்பு இயக்ககம், காஞ்சீபுரம் நகரின், அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சி குறித்த அறிக்கையை தயார் செய்து வருகிறது. காஞ்சீபுரம் உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது அறிக்கை தயாரித்து வருகின்றன.

Next Story