ஏரி மண் கடத்த முயன்றவர்கள் ஓட்டம் - பொக்லைன் எந்திரம் பறிமுதல்
சோளிங்கர் அருகே ஏரியில் மண் கடத்த முயன்றவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.
சோளிங்கர்,
சோளிங்கரை அடுத்த வைலம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அள்ளி வாகனங்களில் சிலர் கடத்த உள்ளதாக அரக்கோணம் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தாசில்தார் ஜெயக்குமார் தனது அலுவலர்களுடன் அங்கு விரைந்தார். அந்த ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மண்ணை தோண்டி எடுத்து வாகனங்களில் ஏற்றுவதற்காக தயார் செய்துகொண்டிருந்தனர். அதிகாரிகளின் வாகனம் வருவதை பார்த்ததும் மண்ணை அள்ளிக்கொண்டிருந்தவர்கள் பொக்லைன் எந்திரத்தை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் மண் கடத்த முயற்சித்தது தெரியவந்தது.
இதனையடுத்து பொக்லைன் எந்திரத்தை தாசில்தார் பறிமுதல் செய்து சோளிங்கர் கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் அளித்த புகாரின்பேரில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story