வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் நடவடிக்கை
ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சி செயலாளரும், மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கிராம உதவியாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கீழ்பென்னாத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக ம.சுகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாக கலெக்டர்கே.எஸ்.கந்தசாமிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ம.சுகுமாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
இதேபோல் செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சங்கர். இவரது மனைவி மேல்புழுதியூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடுகிறார். மனைவியின் வெற்றிக்காக சங்கர், அந்த பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாக தாசில்தாருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார்கள் வந்தன.
இ்தனையடுத்து கிராம உதவியாளர் சங்கரை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் தாசில்தார் ஏ.எஸ்.பார்த்தசாரதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story