தக்கலை அருகே லாரி மோதி காவலாளி பலி


தக்கலை அருகே லாரி மோதி காவலாளி பலி
x
தினத்தந்தி 27 Dec 2019 4:15 AM IST (Updated: 27 Dec 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே லாரி மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே கல்லுவிளை படுவன்குழியை சேர்ந்தவர் மிக்கேல் (வயது 65). இவர் தக்கலையில் ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மாலையில் வேலை முடிந்து தக்கலையில் இருந்து கல்லுவிளை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

பரைக்கோடு அருகே ஆலுவிளை பகுதியில் செல்லும்போது, பின்னால் பால் ஏற்றிய ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி மிக்கேல் ஓட்டி சென்ற ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்ற போது பக்கவாட்டில் மோதியது. இதில் மிக்கேல் கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தக்கலை போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்த மிக்கேலுக்கு ரோஸ்மேரி என்ற மனைவியும,் 3 மகள்களும் உள்ளனர்.

Next Story