சேலம் மாவட்டத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு: 1,568 வாக்குச்சாவடிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சேலம் மாவட்டத்தில் இன்று முதல்கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 1,568 வாக்குச்சாவடிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 1,568 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள்.
சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை போலீசாருக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியம் வீதம் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். மேலும், உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணி என்று அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினர்.
3 ஆயிரம் போலீசார்
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 2 கம்பெனி பட்டாலியன் போலீசார் 200 பேரும், ஓய்வுபெற்ற போலீசார் 100 பேரும், முன்னாள் ராணுவ வீரர்கள் 300 பேரும், மாவட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த 285 பேர் உள்பட மொத்தம் சுமார் 3 ஆயிரம் போலீசார் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று மாலை வாக்குப்பதிவு நடக்கும் மையங்களுக்கு சென்றுவிட்டனர். இதுதவிர, மாவட்டத்தில் 214 பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாருடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடும் ஊர்க்காவல் படையினருக்கு மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டர் பெரியசாமி அறிவுரை வழங்கினார்.
வாகனங்கள்
இதனிடையே, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி பிரித்து அனுப்பி வைக்கும் பணி நேற்று குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதற்காக மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து அனைத்து வாகனத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் ஏறி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர். மழை பெய்தால் தேர்தல் பொருட்கள் நனையாமல் இருக்க லாரிகளின் பின்பகுதியில் தார்பாய் கொண்டு கூடாரம் அமைக்கப்பட்டு பொருட்கள் எடுத்து செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story