பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட நட்பை பயன்படுத்தி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரையை சேர்ந்த 15-வயது மதிக்கத்தக்க மாணவி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள இவர் சமூக வலைதளங்களிலேயே பல மணி நேரம் இருந்துள்ளார். அப்போது மதுரை தெப்பக்குளம் நியூ பங்கஜம் காலனியை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் அல்ஹசன்(20) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார்.
அவர்கள் இருவரும் தினமும் பல்வேறு தகவல்களை அதில் பதிவு செய்தனர். இதனால் நட்பில் தொடங்கிய அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்த மாணவி தனது புகைப்படங்களை அதில் பதிவு செய்தார். அதை தனக்கு சாதகமாக அல்ஹசன் பயன்படுத்தி, மாணவியை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். புகைப்படத்தை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து நாமக்கல் சென்ற அல்ஹசன் அங்கு மாணவியை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவரை சீரழித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அல்ஹசன் தொடர்ந்து மிரட்டி வந்ததால் மாணவி மனவருத்தம் அடைந்தார். அவர் தனக்கு நடந்த கொடுமைகளை தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் மாணவி இது குறித்து மதுரை தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் அல்ஹசனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story