வாடிப்பட்டி அருகே பரிதாபம், ரெயில் மோதி மாணவர் சாவு
வாடிப்பட்டி அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டி மூப்பர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தனியார் நிறுவனத்தில் டிரைவராக இருக்கிறார். இவரது மனைவி நாகவீரலட்சுமி. இந்த தம்பதிக்கு ஜோதிராம் (வயது 15), புகழேந்தி (11) ஆகிய 2 மகன்கள். இவர்களில் ஜோதிராம், பாண்டியராஜபுரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கிருஷ்ணமூர்த்தியின் வீட்டின் அருகில் ரெயில் தண்டவாளம் உள்ளது. நேற்று காலை 7.45 மணிக்கு வீட்டின் அருகில் செல்லும் தண்டவாளத்தை ஜோதிராம் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோதிராம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ஜோதிராம் இறந்து போனார்.
மதுரை ரெயில்வே போலீசார் அங்கு வந்து மாணவர் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story