வேளாண் பயிர்களுக்கு காப்பீடு - கலெக்டர் தகவல்


வேளாண் பயிர்களுக்கு காப்பீடு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 Dec 2019 10:00 PM GMT (Updated: 27 Dec 2019 12:35 AM GMT)

உளுந்து, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கும், மிளகாய், வெங்காயம், கரும்பு மற்றும் வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசாணைகள் பெறப்பட்டுள்ளது என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை, 

மாவட்டத்தில் வறட்சி, புயல், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடா்கள் மற்றும் பூச்சி, நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்யும் நோக்குடன் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, ராபி பருவத்தில் உளுந்து, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கும், மிளகாய், வெங்காயம், கரும்பு மற்றும் வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசாணைகள் பெறப்பட்டுள்ளது.

உளுந்துக்கு காப்பீடு பிரீமியமாக ஏக்கருக்கு ரூ.236 செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந்தேதியாகும்.

இதேபோல் நிலக்கடலை பயிர் காப்பீடுக்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.297, மிளகாய் பயிருக்கு பிரீமியமாக ஏக்கருக்கு ரூ.1,040 செலுத்த வேண்டும். பருத்திக்கு ரூ.1,017, வெங்காத்திற்கு ரூ.1,215 செலுத்த வேண் டும். இந்த பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15-ந்தேதியாகும். இதேபோல் வாழைக்கு காப்பீடு பிரீமியமாக ஏக்கருக்கு ரூ.2,120 செலுத்த வேண்டும். இதற்கு பிப்ரவரி 28-ந்தேதி கடைசி நாளாகும். மேலும் கரும்புக்கு பிரீமிய தொகை ஏக்கருக்கு ரூ.2,600 செலுத்த வேண்டும், காப்பீடு செய்ய கடைசி நாள் அக்டோபர் 31-ந்தேதியாகும்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story