மாவட்ட செய்திகள்

பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு + "||" + Collector Ratna inspects the troubled polling station

பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு

பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர் மற்றும் செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நேற்று 522 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி 495 வாக்குச்சாவடிகளில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினையும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். மேலும் திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் மாவட்டத்தில், 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் ரத்னா கூறினார்.
2. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
அரியலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
3. பட்டு விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு ; கலெக்டர் வழங்கினார்
பட்டு விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா ஊக்கப்பரிசு வழங்கினார்.
4. காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்; கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்
காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் என்று நுகர்வோருக்கு கலெக்டர் ரத்னா அறிவுறுத்தி உள்ளார்.
5. 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் - கலெக்டர் ரத்னா தகவல்
21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் என்று கலெக்டர் ரத்னா கூறினார் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-