திருப்பத்தூர் அருகே, ஓடும் ரெயிலில் 35 கிலோ குட்கா பறிமுதல்
திருப்பத்தூர் அருகே ஓடும் ரெயிலில் 35 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருக்கைக்கு அடியில் தமிழக அரசு தடை விதித்துள்ள போதை பொருளான குட்கா இருந்தது. இவை தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பயணிகள் ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தனர்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில் போலீசார் திருப்பத்தூர் அருகே நின்ற எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.2 பெட்டியில் இருக்கை எண் 6 மற்றும் 47-க்கு அடியில் 2 மூட்டைகள் இருந்தது. அதனை எடுத்து பார்த்தபோது 35 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை போலீசார் பறிமுதல் செய்து திருப்பத்தூர் உணவுத்துறை இன்ஸ்பெக்டர் பழனிசாமியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் ரெயிலில் குட்காவை கடத்தியது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story