கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டநெரிசலில் கீழே விழுந்தவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது - பயணிகள் மறியல் போராட்டம்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டநெரிசலில் தவறி விழுந்த பயணி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனால் சென்னையில் வசிப்பவர்கள், தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இதனால் பஸ் நிலையத்தில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் திருச்சி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாததால் பஸ் நிலையத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக நீண்டநேரம் காத்து நின்றனர்.
அப்போது அங்குவந்த திருச்சி செல்லும் பஸ்சில் பயணிகள் ஒருவரையொருவர் முண்டி அடித்துக்கொண்டு ஏறினர். இதில் பெரம்பலூரைச் சேர்ந்த செல்வராஜ்(வயது 40) என்ற பயணி, பஸ்சில் ஏறும்போது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
அவர் மீது பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் செல்வராஜின் கால் நசுங்கியது. படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயணி மீது பஸ் ஏறியதாலும், சரியாக பஸ்கள் இயக்கப்படாததாலும் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த பயணிகள், திடீரென கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் கோஷமிட்டு பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார் மற்றும் பஸ் நிலைய மேலாளர் ரகுராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து திருச்சி, திருவண்ணாமலை, வந்தவாசி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story