காஞ்சீபுரம், மதுராந்தகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


காஞ்சீபுரம், மதுராந்தகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2019 3:45 AM IST (Updated: 28 Dec 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், மதுராந்தகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஞ்சீபுரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பபெற கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி பங்கு பெற்றன. மேலும் இஸ்லாமியர்கள், பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார முஸ்லீம் ஜமா அத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட ஜமா உலமா சபை பொருளாளர் மவுலவி யூசப்உலவி தலைமையில் மதுராந்தகம் வட்டார ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் த.மு.மு.க. ஷாஜகான், தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் நூருல் அமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செங்கை வட்டார தலைவர் ஹக்தாவுதி, எம்.எல்.ஏ. புகழேந்தி, விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமார், த.ம.மு.க. தலைமை கழக பேச்சாளர் பழனி பரூக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் பல்வேறு கட்சிகள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story