பாளையங்கோட்டை வேய்ந்தான்குளத்தில் 2 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன


பாளையங்கோட்டை வேய்ந்தான்குளத்தில் 2 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன
x
தினத்தந்தி 28 Dec 2019 5:00 AM IST (Updated: 28 Dec 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளத்தில் 2 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

நெல்லை, 

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளத்தில் 2 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

வேய்ந்தான்குளம்

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் வேய்ந்தான்குளம் உள்ளது. இந்த குளம் முட்செடிகளும், குப்பைகளுமாக காணப்பட்டது. இந்த குளத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக அமைப்புகள் கலெக்டர் ‌ஷில்பா உதவியுடன் தூர்வாறினார்கள். இதனால் குளம் ஆழப்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கின்ற நிலையில் உள்ளது. இந்த குளம் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கும் நேரத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு செல்லக்கூடிய ஏராளமான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்லும். இதே போல் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பெரியகுளத்திலும் பறவைகள் தங்கி செல்லும். இதனால் இந்த குளத்திற்கு வருகின்ற பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் முயற்சி நடந்து வருகிறது.

இந்தநிலையில் குளம் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிப்பதால் குளத்தில் 2 ஆயிரம் மீன் குஞ்சுகள் விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கலெக்டர் ‌ஷில்பா நேற்று குளத்தில் 2 ஆயிரம் மீன்குஞ்சுகளை தண்ணீரில் விட்டார்.

மீன்குஞ்சுகள்

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த குளத்தில் விடப்பட்ட மீன்குஞ்சுகள், கொசுக்களின் முட்டைகளை உணவாக உட்கொள்ளும். இதனால் கொசு உற்பத்தியாவது தடுக்கப்படும். இந்த மீன்கள் இங்கு வருகின்ற பறவைகளுக்கு உணவாக பயன்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளம் மேலும் தூய்மை செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். அப்போது இது பறவைகள் சரணாலயமாக மாறுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

இந்த குளத்தில் கழிவுநீர் விடுவதையும், குப்பை கொட்டுவதையும் பொதுமக்கள் தடுக்க வேண்டும். இதேபோல் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பெரியகுளத்திலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ‌ஷில்பா, அந்த குளத்திற்கு வந்துள்ள பறவைகளை தொலைநோக்கி கருவி மூலம் பார்வையிட்டார். அப்போது நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுஜி பிரேம்லா, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, பொறியாளர் லெனின், ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி, மயன்ரமே‌‌ஷ்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story