உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஆர்வம்: 87 வயது மாமியாரை வாக்குச்சாவடிக்கு ‘அலேக்’காக தூக்கி வந்த மருமகள்


உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஆர்வம்: 87 வயது மாமியாரை வாக்குச்சாவடிக்கு ‘அலேக்’காக தூக்கி வந்த மருமகள்
x
தினத்தந்தி 28 Dec 2019 4:30 AM IST (Updated: 28 Dec 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க 87 வயது மாமியாரை வாக்குச்சாவடிக்கு ‘அலேக்’காக தூக்கி வந்த மருமகள் வாக்களிக்க செய்தார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சி ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(வயது 87). இவருடைய மருமகள் பாண்டியம்மா. சென்னீர்குப்பம் ஊராட்சியில் நேற்று முதல்கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பிய மூதாட்டி பாப்பம்மாள், தனது விருப்பத்தை மருமகள் பாண்டியம்மாவிடம் கூறினார்.

தனது மாமியாரின் ஆசையை தட்டிக்கழிக்க விரும்பாத பாண்டியம்மா, ஆட்டோ மூலம் மாமியாரை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தார். ஆனால் வாக்குச்சாவடிக்குள் செல்வதற்கு அங்கு சக்கர நாற்காலி வசதி இல்லை. இதனால் பாண்டியம்மா, தனது மாமியாரை இரு கைகளால் ‘அலேக்’காக வாக்குசாவடிக்குள் தூக்கிச்சென்று வாக்களிக்க செய்தார்.

87 வயது மூதாட்டி ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததும், அவரை மருமகளே கைகளால் தூக்கி வந்ததும் அங்கிருந்த வாக்காளர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரை நெகிழ்ச்சி அடையச்செய்தது.

Next Story