ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று நடந்தது. மொத்தம் 784 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஒரு வாக்காளர் 4 வாக்குகள் அளித்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் சென்றதும் 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. வாக்குச்சீட்டில் முத்திரையை பதிவு செய்து தனித்தனியாக வாக்குச்சீட்டுகளை ஓட்டுப்பெட்டியில் செலுத்தினார்கள். வாக்குப்பதிவு நடந்ததை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, திம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலசமுத்திரம் ஊராட்சி, தொட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, படியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, வீரசோழபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் தொடர்பான விவரங்களையும் அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது என்றும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் இணையதளம், வீடியோகிராபர், நுண் தேர்தல் பார்வையாளர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் உரிய பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார்.
முன்னதாக ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பெரியபாளையம் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த 80 வயது மூதாட்டி வள்ளியம்மாள் வாக்களிக்க வசதியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சக்கர நாற்காலியில் அமர்ந்து வாக்களிக்க அழைத்து செல்லப்பட்டார். வாக்களித்து விட்டு வந்த மூதாட்டியிடம் ஜனநாயக கடமை ஆற்றியதற்கு பாராட்டு தெரிவித்து, அவரை பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச்செல்ல அங்கிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், திருப்பூர் வடக்கு, காங்கேயம் தாசில்தார்கள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story