திருச்சி மாவட்ட முதல் கட்ட தேர்தல்: ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கலெக்டர் ஆய்வு
திருச்சி மாவட்ட முதல் கட்ட தேர்தலில் ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி,
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த 6 ஒன்றியங்களிலும் மொத்தம் 76.18 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கும் எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
அதன்படி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் பேரூர் காவேரி என்ஜினீயரிங் கல்லூரியிலும், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருவெறும்பூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் குண்டூர் எம்.ஐ.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரியிலும், மணப்பாறை ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் வேங்கைகுறிச்சி குறிஞ்சி என்ஜினீயரிங் கல்லூரியிலும், மருங்காபுரி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் வீ.கைகாட்டி விடியல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், வையம்பட்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் ஆலத்தூர் ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் என்று 6 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான எஸ்.சிவராசு நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 6 இடங்களில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார். அடுத்ததாக 2-ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (திங்கட்கிழமை) 8 ஒன்றியங்களில் நடக்கிறது. 2 கட்ட தேர்தல் முடிந்ததும் ஜனவரி 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட உள்ளன.

Related Tags :
Next Story