மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது


மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 29 Dec 2019 4:00 AM IST (Updated: 28 Dec 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

பெங்களூரு, 

மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

மங்களூருவில் கடந்த 19-ந்தேதி இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைதொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மங்களூரு குத்ரோலியை சேர்ந்த ஜலீல் (வயது 49), பைங்கெரேயை சேர்ந்த நவுசின் (23) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி

அதன்படி நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ரெயில்வே மந்திரி தினேஷ் திவேதி, நதிமுல் ஹக்கியூ எம்.பி. ஆகியோர் மங்களூருவுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜலீல், நவுசின் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் கட்சி சார்பில் தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவர்களிடம் திரிணாமுல் காங்கிரசார் வழங்கினர்.

பின்னர் தினேஷ் திவேதி நிருபர்களிடம் கூறுகையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்காக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய கொன்றது கண்டிக்கத்தக்கது. மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு எங்கள் கட்சி சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அரசியல் நோக்கமும் இல்லை. தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் வகையில் இந்த நிவாரண நிதி வழங்கியுள்ளோம் என்றார்.

Next Story