ஒரகடம் மேம்பாலம் அருகே சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ஒரகடம் மேம்பாலம் அருகே சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2019 4:00 AM IST (Updated: 28 Dec 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் மற்றும் வண்டலூர்- வாலாஜாபாத் செல்லும் 6 வழி சாலையின் முக்கிய சந்திப்பு பகுதியாக ஒரகடம் மேம்பாலம் உள்ளது. இந்த 6 வழி சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் இங்கு துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் முறையாக சேகரிக்காமல் குப்பைகள் தொட்டியின் வெளியே கொட்டி கிடக்கிறது.

சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் சாலையோரங்களில் அதிகப்படியான குப்பை தொட்டிகளை அமைத்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story