ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணும் மையங்கள் பூட்டி ‘சீல்’ வைப்பு
தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த 940 வாக்குச்சாவடிகளில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தர்மபுரி, நல்லம்பள்ளி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு நேற்று அதிகாலை வரை ஓட்டுப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.
அறைகளுக்கு ‘சீல்’
இதேபோல் கடத்தூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரிக்கும் கொண்டு செல்லப்பட்டன. அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓட்டுப்பெட்டிகள் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த ஓட்டுப்பெட்டிகள் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் தேர்தல் பிரிவு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டன. பின்னர் அவை பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டன. அதன்பின் அந்த அறைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களிலும் இரவு பகல் என 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சூழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story