மக்கும் குப்பையில் உரம் தயாரித்து பள்ளிக்கரணையில் பசுமை விவசாயம் - மாநகராட்சி நடவடிக்கை


மக்கும் குப்பையில் உரம் தயாரித்து பள்ளிக்கரணையில் பசுமை விவசாயம் - மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2019 3:45 AM IST (Updated: 29 Dec 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘பசுமை விவசாயத்தை’ பள்ளிக்கரணை குப்பை கொட்டும் வளாகத்தில் ஆரம்பித்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை பிரித்தெடுத்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உரத்தை மலிவான விலையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘பசுமை விவசாயத்தை’ பள்ளிக்கரணை குப்பை கொட்டும் வளாகத்தில் ஆரம்பித்துள்ளது. பள்ளிக்கரணையில் 8 முதல் 10 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்து அதில் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தை கொண்டு, பசுமை விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு 10 வகையான கீரை வகைகள், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் தெளிக்காமல், மாநகராட்சியில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை கொண்டு, விவசாயம் செய்யப்படுகிறது. இதில் இருந்து பெறப்படும் காய்கறிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Next Story