தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2-ம் கட்டமாக 10 ஒன்றியங்களுக்கு தேர்தல் நாளை நடக்கிறது

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2-ம் கட்டமாக 10 ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நாளை (திங்கட் கிழமை) நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. நாளை (திங்கட்கிழமை) 2-ம் கட்ட தேர்தல் கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் பிரசாரம் நேற்று மாலை 5 மணி உடன் ஓய்ந்தது.
2-ம் கட்ட தேர்தலுக்காக 5 ஒன்றியங்களிலும் 1,046 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 96 ஆயிரத்து 566 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
8,317 அலுவலர்கள்
இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஊராட்சி தேர்தலுக்காக 23 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 456 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 8,317 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்கட்ட வாக்குப்பதிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், முன்னாள் ராணுவத்தினர் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், பொருட்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்லவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்திட தேவையான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர், ஏரியூர், காரிமங்கலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,36,439 ஆண் வாக்காளர்கள், 2,21,205 பெண் வாக்காளர்கள், 18 இதரர்கள் என மொத்தம் 4,57,662 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். 2-ம் கட்ட தேர்தலில் 8 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 49 பேர் போட்டியிடுகிறார்கள். இதேபோல் 85 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 362 பேரும், 113 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 384 பேரும் போட்டியிடுகிறார்கள். 1,059 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,209 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் 1,265 பதவிகளுக்கு மொத்தம் 3,004 பேர் களத்தில் உள்ளனர்.
781 வாக்குச்சாவடிகள்
மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக ஒன்றிய வாரியாக பென்னாகரம்-180, காரிமங்கலம்-201, பாலக்கோடு-212, ஏரியூர்-96, மொரப்பூர்-92 என மொத்தம் 781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 146 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. 2-ம் கட்ட தேர்தல் பணியில் 6,158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்த தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதற்றமானவை என கண்டறியப்பட்ட 146 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மலர்விழி தெரிவித்தார்.

Related Tags :
Next Story