நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியில் புதிய திட்டத்தை கைவிட கோரி முதல்-அமைச்சரை சந்திக்க ஒப்பந்ததாரர்கள் முடிவு
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியில் புதிய திட்டத்தை கைவிட கோரிக்கை விடுப்பது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேச ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருச்சி,
தமிழ்நாடு நெஞ்சாலைத்துறை பேவர் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அவசர கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் திரிசங்கு தலைைம தாங்கினார். கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட சாலைகளை செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என்ற திட்டத்தின் மூலம் பராமரிக்கப்படும் என அறிவித்தார். இதனால் தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள மாநில சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளின் மொத்த நீளம் 939 கிலோ மீட்டர் சாலை பணிகளையும் ஒட்டுமொத்தமாக ஒரே ஒப்பந்ததாரரிடம் 5 வருட காலத்திற்கு ஒப்படைக்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க முடியாத நிலை ஏற்படும்.
வாழ்வாதாரம்...
இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு 3 மடங்கு கூடுதலாக செலவீனம் ஏற்படும். கடந்த 1999 முதல் இதுநாள் வரை மைய சுடுகலவை எந்திரத்தை பயன்படுத்தி சாலை பணிகளை செய்து வரும் தஞ்சாவூர் மாவட்ட 32 ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களிடம் வேலை செய்து வருகிற 3 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே புதிய திட்டத்தை கைவிட்டு பழைய நடைமுறையே தொடர ஆவன செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்படுகிற தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் சேர்த்து பணியின் மதிப்பீட்டு தொகையில் 15 சதவீதம் கொடுக்க வேண்டும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அய்யப்பன், முருகேசன், கட்டுனர் சங்க மாநில தலைவர் முத்துக்குமார், மூத்த ஒப்பந்ததாரர் கண்ணையன் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story