சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவிலில் 3,008 திருவிளக்கு பூஜை


சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவிலில் 3,008 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 29 Dec 2019 3:15 AM IST (Updated: 29 Dec 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவிலில் 3,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சுரண்டை, 

சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவிலில் 3,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு குற்றால தீர்த்தம் கொண்டு வருதல், 10 மணிக்கு அபிஷேகம், மாலை 4 மணிக்கு தேவாரம், 5 மணிக்கு பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், 6 மணிக்கு 3008 திருவிளக்கு பூஜை ஆகியவை நடந்தது.

குற்றாலம் ஐந்தருவி, சுவாமி விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி அகிலானந்தர் தலைமை தாங்கினார். திருவிளக்கு பூஜை கமிட்டி பொறுப்பாளர்கள் செல்லத்துரை, சுப்புமாணிக்கவாசகம், முருகன், முத்துமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர் செல்வம் வரவேற்றார். செங்கோல் ஆதீனம் 103-வது பட்டம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பிரமச்சாரி சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். டாக்டர் முத்துலட்சுமி முருகையா திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, விளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனர். இரவு 9 மணிக்கு திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

Next Story