பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் துறைமுக வழித்தடத்தில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாமதமாக இயக்கப்படும்
மத்திய ரெயில்வேயின் மாட்டுங்கா- முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் பிற்பகல் 3.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 10.59 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் மாட்டுங்கா- முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்த ரெயில்கள் வித்யாவிகார், காஞ்சூர் மாா்க், நாகுல் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. பயணிகள் சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் இங்கு செல்லலாம்.
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.
சேவை ரத்து
துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.- சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி., வடலா ரோட்டில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெலுக்கும், காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் பன்வெல்- குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இதேபோல காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, கோரேகாவிற்கும், காலை 10.45 மணி முதல் மாலை 4.58 மணி வரை கோரேகாவ், பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று பகல் நேரத்தில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் வழக்கம் போல மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story