உத்தவ் தாக்கரே எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்


உத்தவ் தாக்கரே எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்
x
தினத்தந்தி 29 Dec 2019 5:00 AM IST (Updated: 29 Dec 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தான் எடுத்த அற்புதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நெட்டிசன் கண்களுக்கு விருந்தளித்து உள்ளார்.

மும்பை, 

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தான் எடுத்த அற்புதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நெட்டிசன் கண்களுக்கு விருந்தளித்து உள்ளார்.

புகைப்பட கலைஞர்

மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே சிறந்த கேலிசித்திர கலைஞர். அவரது மகனும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே சிறந்த புகைப்பட கலைஞர். குறிப்பாக இயற்கை மற்றும் வனவிலங்குகளை படம் பிடிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்.

இந்தநிலையில் உத்தவ் தாக்கரே சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எடுத்த இயற்கை புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

கடந்த 26-ந்தேதி அந்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘‘இது ஐபோனில் எடுத்த படம்'' என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த படத்தை 17 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை ‘லைக்’ செய்து உள்ளனர். பூக்கள் மற்றும் மரங்கள் பின்னணியில் சூரியன் உதிப்பது போன்ற அந்த அற்புத புகைப்படம் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் படங்கள்

மராட்டியத்தில் பெரும் அரசியல் பூகம்பங்களுக்கு பிறகு தனது தலைமையில் புதிய அரசு உதயமாகி இருப்பதை நினைவூட்டும் வகையில் அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக பேசப்படுகிறது.

இதேபோல சிக்கிம் பகுதியில் தான் எடுத்த புலிப்படம், கர்நாடக மாநிலம் ஹம்பி குகை படம், மகாபலேஷ்வர் கோவில் ஆகியவற்றின் படங்களையும் உத்தவ் தாக்கரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story