காதல் மயக்கம்: 17 வயது சிறுவனுடன் 26 வயது பெண் ஓட்டம்
மதுரையில் 17 வயது சிறுவனை காதல் மயக்கத்தில் 26 வயது பெண் அழைத்துச்சென்றுள்ளார். இருவரையும் போலீசார் தேடுகின்றனர்.
மதுரை,
மதுரையை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தாத்தா வீட்டில் தங்கி இருந்தான். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 26 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் வயது வித்தியாசம் தெரியாமல் காதலாக மாறியது. ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கு இதுபற்றி தெரியவில்லை. மேலும் அவர்கள் சிறுவன், இளம்பெண்ணுடன் பழகுவதை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை.
இந்த நிலையில் இருவரும் மாயமாகி விட்டனர். இருவீட்டினரும் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்து விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது தான் அவர்கள் இருவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காதலித்து வந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தினர் கரிமேடு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மற்றும் அந்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். காதல் மயக்கத்தில் 26 வயது இளம் பெண் சிறுவனை அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story