கீழவெண்மணியில் தியாகிகளுக்கு நினைவிடம் கட்டும் பணிகள் மும்முரம் 6 மாதத்துக்குள் முடிவடையும்
கீழவெண்மணியில் தியாகிகளுக்கு நினைவிடம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 6 மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கீழவெண்மணி கிராமம் உள்ளது. விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழிலாளர்களே பெரும்பாலும் இங்கு வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி பண்ணைகளில் வேலை பார்த்த தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராடினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 பேர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந்தேதி தியாகிகள் நினைவு தினம் வர்க்க ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நினைவிடம் கட்டும் பணி
அன்றைய நாளில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கீழவெண்மணிக்கு வந்து இங்குள்ள தியாகிகள் நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வெண்மணி தியாகிகளின் நினைவாக இந்த பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் கட்ட நிர்ணயிக்கப்பட்டது. தற்போது தியாகிகளுக்கு நினைவிடம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெறும் கருங்கல்லை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படுவது என்பது இந்த நினைவிடத்தின் சிறப்பம்சமாகும். இந்த கற்கள் பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-
கீழ்வேளூரை அடுத்த கீழவெண்மணி கிராமத்தில் கடந்த 1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி பண்ணைகளில் வேலை பார்த்த தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராடியபோது ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக 44 பேர் ஒரே குடிசையில் வைத்து உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். இவர்களின் வீரமரணத்தின் நினைவாக கீழ வெண்மணியில் தியாகிகள் நினைவிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2007-ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சி.ஐ.டி.யூ. மாநில தலைமையகம் மேற்பார்வையில் இந்த தியாகிகள் நினைவிடத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மின்சார தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் பெரும்பாலான தொகையை கொடுத்துள்ளனர்.
சுற்றுலா தலமாக
கீழ் தளம், முதல் தளம் உள்ளிட்டவைகளுடன் கட்டப்படும் இந்த நினைவிடத்தின் மேல் 3 டன் எடைகொண்ட கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட வாழைப்பூ மொட்டு ஒன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமைக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக நினைவிடத்தை சுற்றி 44 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தூண்களில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நினைவிடத்தில் முன்பு 44 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தொடர்ந்து எரியக்கூடிய விளக்கு, வன்முறையால் எரிக்கப்பட்ட குடிசையின் மாதிரி உள்ளிட்டவைகள் நினைவிடத்தில் இடம்பெறும். அப்போதுள்ள நில மிராசுதாரர்களின் கொடுமைகள், தீண்டாமை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூக கொடுமைகள் உள்ளிட்டவைகளை எடுத்துக்கூறும் வகையிலான சிற்பங்களும் நினைவிடத்தில் காட்சிப்படுத்தப்படும்.
இங்கு கிராமபுற ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்காக போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகளுடைய செயல்வீரர்களுக்கான பயிற்சி மையமாகவும் இருக்கும். கருங்கல்லின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது 90 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 6 மாதத்துக்குள் கீழவெண்மணி தியாகிகள் நினைவிட கட்டுமான பணிகள் முழுவதும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தியாகிகள் நினைவிடம் விரைவில் சுற்றுலா தலமாக மாறும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story