பாவூர்சத்திரம் அருேக மதுவில் வி‌‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை


பாவூர்சத்திரம் அருேக மதுவில் வி‌‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 Dec 2019 3:30 AM IST (Updated: 30 Dec 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து ெதாழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து ெதாழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கூலித்தொழிலாளி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் செல்லையா நாடார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கண்ணன் (வயது 33) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மதுகுடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கண்ணன் நேற்று முன்தினம் வீட்டில் மதுவில் வி‌‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

சாவு

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story