10-ம் வகுப்பு மாணவி மானபங்கம்: 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு


10-ம் வகுப்பு மாணவி மானபங்கம்: 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Dec 2019 4:00 AM IST (Updated: 30 Dec 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்த 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தானே, 

10-ம் வகுப்பு மாணவியை மானபங்கம் செய்த 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மானபங்கம்

தானேயில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி கடைக்கு சென்று பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள்.

அப்போது சிறுமியை வழிமறித்த 2 பேர், தங்களை நண்பராக்கி கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். இதற்கு மறுத்ததால் அவர்கள் சிறுமியை மானபங்கம் செய்தனர். மேலும் இதனை யாரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

தலா 3 ஆண்டு ஜெயில்

இதையடுத்து சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கணேஷ்புரி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மானபங்கம் செய்த ரமேஷ் மற்றும் கணேஷ் முலேவை கைது செய்தனர்.

மேலும் இவர்கள் மீது தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, ரமேஷ் மற்றும் கணேஷ் முலேவுக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Next Story