சிவசேனா அரசு கொண்டுவந்துள்ள “பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி” நவநிர்மாண் சேனா குற்றச்சாட்டு
சிவசேனா அரசு கொண்டுவந்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என நவநிர்மாண் சேனா கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை,
சிவசேனா அரசு கொண்டுவந்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என நவநிர்மாண் சேனா கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
அரசாணை வெளியீடு
சிவசேனா அரசு சமீபத்தில் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி திட்டத்தை கொண்டு வந்தது. இந்த நிலையில் மராட்டிய அரசின் இதுகுறித்த அரசாணையில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.
இதன்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.2 லட்சத்திற்குள் பயிர்க்கடன் பெற்று 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை திருப்பி செலுத்தாதவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர். ரூ.2 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இந்த திட்டத்தால் நன்மை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விவசாயிகளுக்கு அநீதி
இதற்கு நவநிர்மாண் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அனில் சிதோரே கூறியதாவது:-
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசு அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். ஏனெனில் இந்த நிபந்தனைகளால் அவர்களில் பலர் இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு தகுதி பெற மாட்டார்கள்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்திருந்தார். இதேபோல் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாணையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கண்டிப்புக்கு உரியவையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story