உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
கவுந்தப்பாடி,
பவானி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் கவுந்தப்பாடி அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடும்பத்தினருடன் ஓட்டுப்போட்ட தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று கொண்டிருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீதம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்.
உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகள் தள்ளிப்போனதற்கு தி.மு.க.தான் காரணம். அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளும் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார்.
ஸ்டாலின் மக்கள் மத்தியில் தமிழக அரசை பற்றி குறை சொல்வதை விட்டுவிட்டு தன் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story