மோகனூர் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு
மோகனூர் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 25 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 15 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 204 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இப்பகுதிகளில் ஒருவந்தூர், ஆர்.சி.பேட்டப்பாளையம், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அண்டாபுரம், அரசநத்தம் ஆகிய ஊராட்சி பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் ஒருவந்தூர் புதூரில் உள்ள வாக்குச்சாவடிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளையப்பட்டி, ஆர்.சி.பேட்டப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஒருவந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டர் மெகராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் இணைந்து பார்வையிட்டு, வாக்குப்பதிவு பற்றி கேட்டறிந்தனர். அப்போது மோகனூர் ஒன்றிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணாளன் உடனிருந்தார். நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசங்கர், துணை சூப்பிரண்டுகள் காந்தி, மணிமாறன், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story