மின்சார ரெயிலில் சாகசம் செய்த வாலிபர் சிக்னல் கம்பத்தில் மோதி பலி
மின்சார ரெயிலில் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர், சிக்னல் கம்பத்தில் மோதி பலியானார்.
தானே,
தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் தில்சத் நவுசாத் (வயது20). ஆம்புலன்ஸ் டிரைவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது நண்பர் ஒருவருடன் உறவினர் திருமணத்திற்காக புத்தாடை வாங்க கோவண்டி பகுதிக்கு மின்சார ரெயிலில் வந்தார். இதில் அவர் மின்சார ரெயிலில் வந்தபோது, வாசலில் நின்று சாகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ரெயில் திவா- மும்ரா இடையே வந்தபோது, சாகசத்தில் ஈடுபட்ட தில்சத் நவுசாத் தண்டவாள ஓரம் இருந்த சிக்னல் கம்பத்தில் மோதினார். பின்னர் அதே வேகத்தில் ரெயில் பெட்டிக்குள் வந்து விழுந்தார்.
இதில், படுகாயமடைந்த தில்சத் நவுசாத்தை அவருடன் சென்ற நண்பர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்தநிலையில் வாலிபர் சாகசத்தில் ஈடுபட்டு இரும்பு கம்பத்தில் மோதிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. போலீசார் பயணிகள் மின்சார ரெயில் வாசலில் நின்று சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story