பால்கரில் பயங்கரம்: நோயால் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்த மகன்


பால்கரில் பயங்கரம்: நோயால் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்த மகன்
x
தினத்தந்தி 31 Dec 2019 4:09 AM IST (Updated: 31 Dec 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் நோயால் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பால்கர், 

பால்கர் மாவட்டம் தாராப்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் சந்திராவதி(வயது62). இவரது மகன் ஜெய்பிரகாஷ்(வயது30). சமீப காலமாக சந்திராவதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, ஜெய்பிரகாசுக்கு கடும் கோபத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று சமையலறையில் வேலை செய்துகொண்டு இருந்த தாய் சந்திராவதியின் தலையில் ஜெய்பிரகாஷ் இரும்பு கம்பியால் ஓங்கி தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இளைய மகன் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்பிரகாசை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது தாய் தொடர்ந்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நான் அதை கண்டு சோர்ந்து போய்விட்டேன். இதன் காரணமாக வேறு வழியின்றி கொலை செய்து விட்டேன்” என தெரிவித்தார்.

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story