அரியலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்'
அரியலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் தேர்தல் பார்வையாளர்- கலெக்டர் ஆகியோர் தலைமையில் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடந்த ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 495 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் நேற்று முன்தினம் மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன.
இதில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 180 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வேன்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையமான ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று காலை வரை கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. இதே போல் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 157 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 158 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
‘சீல்’ வைப்பு
பின்னர் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகள் போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ராஜசேகர், கலெக்டர் ரத்னா ஆகியோர் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டன.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு வாக்கு பெட்டிகள் உள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story