மகனுக்கு திருமணம் ஆகாத கவலையில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
கோபி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத கவலையில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடத்தூர்,
கோபி அருகே வாய்க்கால்மேடு கீழ்வானி வாய்க்கால் கரையோரம் நேற்று முன்தினம் காலை சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் ஆண் ஒருவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்தனர்.
உடனே இதுபற்றி கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் பாச்சாங்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 64). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி லட்சுமி. இவர்களுடைய மகன் கருப்புசாமி (வயது 43).
இவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் சரியான வரன் அமையாமல் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக தந்தை பெரியசாமி கவலையில் மனம் உடைந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இந்த நிலையில் அவர் பஸ் ஏறி நேற்று முன்தினம் கோபி அருகே வாய்க்கால்மேடு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள மரத்தில் கயிறு கட்டி தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார்்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story