தொட்டியம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கலெக்டர் ஆய்வு
தொட்டியம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ேபாடப்பட்டு உள்ளது. அந்த மையங்களை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் 6 ஊராட்சி ஒன்றியங்களின் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பாக உள்ளூர் போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்பு ேபாடப்பட்டது.
இதேபோல் நேற்று முன்தினம் லால்குடி, மண்ணச்ச நல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 8 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
கலெக்டர் ஆய்வு
தொட்டியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 171 வாக்குச்சாவடிகளில் பதிவான 358 வாக்குப்பெட்டிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான தொட்டியம் வெற்றி விநாயகா பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு நேற்று காலை 9 மணி வரை கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விடிய விடிய நடந்த இப்பணியை திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சிவராசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.இதேபோல் முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்திலும், தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகளில் பதிவான ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் சிறுகனூர் அருகே கொணலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த மையங்களையும் கலெக்டர் சிவராசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Tags :
Next Story