மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் கட்டமாக திருவரங்குளம், அரிமளம், திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 4 லட்சத்து 36 ஆயிரத்து 540 பேர் வாக்களித்து இருந்தனர். இது 75.40 சதவீதம் ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 235 வாக்குச்சாவடிகளிலும் உள்ள வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பெட்டிகள் சாக்குபையில் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரி, திருமயம் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னமராவதி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் பொன்னமராவதி வி.வி.மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் ஆவுடையார்கோவில் கல்லனேந்தல் பாரதிதாசன் பல்கலை கழகம் மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரிமளம் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி அந்தந்த பகுதியில் உள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இவ்வாறு வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, இந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதேபோல முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் நாளை (வியாழக் கிழமை) எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story