திருப்புவனம் அருகே, கால்வாயில் விழுந்து 2 வயது குழந்தை பலி
திருப்புவனம் அருகே கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே வன்னிகோட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு சண்முகப்பிரியா (வயது4), அபிமன்யு (2) என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த 2 குழந்தைகளும் வீட்டின் அருகே கால்வாய் கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அதில் குழந்தை அபிமன்யு தவறி விழுந்துள்ளான். சிறிது நேரம் கழித்து அவனது தாய் அவனை தேடியுள்ளார். குழந்தை கிடைக்காததால் மானாமதுரை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் வந்த தீயணைப்பு படையினர் கால்வாயில் குழந்தையை தேடினர். சற்று தொலைவில் கால்வாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களுக்கிடையே குழந்தை அபிமன்யு இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story