குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: வீடுகளின் முன் கோலம் போட்டு பொதுமக்கள் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: வீடுகளின் முன் கோலம் போட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2020 4:00 AM IST (Updated: 1 Jan 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வீடுகளின் முன் கோலம் போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் கோலம் போட்டு போராட்டம் நடத்திய வர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்ட னம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தங்களது வீடுகளின் முன் வேண்டாம் குடியுரிமை திருத்த சட்டம் என்பதை தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட கேம் பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகிய வற்றை கண்டித்து வீடுகளின் முன் கோலம் போடும் போராட்டம் நடைபெற்றது. கோவை உக்கடம் ஜெ.கே. கார்டன் பகுதியில் மாவட்ட தலை வர் அபுதாகிர் தலைமையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோலம் போட்டனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் ஏராளமான பெண்கள் தங்களது வீடுகளின் முன்கோலம் போட்டு போராட்டம் நடத்தினர். இந்த கோலங்களின் அருகில் குடியுரிமை திருத்த சட் டம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என்று ஆங்கிலத்தில் எழுதினர்.

கோவை சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பி னர் நா.கார்த்திக் வீட்டின் முன் நேற்று காலை குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோலம் போடப்பட்டு இருந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இது குறித்து பெண்கள் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் இலங்கை தமிழர்கள் குடியுரிமை பெறமுடியாத நிலை உள்ளது. இத னால் அவர்களின் குழந்தைகள் உயர் கல்விபடிப்பதும் பாதிக்கப்படும். மேலும் இந்த சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றனர். 

Next Story