தபால் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி தி.மு.க.வினர் சாலை மறியல்


தபால் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Jan 2020 4:30 AM IST (Updated: 1 Jan 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

தபால் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி கொரடாச்சேரி அருகே தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொரடாச்சேரி,

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த தேர்தல் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. இேதபோல் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முகந்தனூர் தபால் நிலையத்திற்கு வந்துள்ளது.

இந்த வாக்குகளை தற்காலிக தபால்காரர், தேர்தலில் போட்டியிடும் தனது உறவினர்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

தி.மு.க.வினர் சாலைமறியல்

இந்த தபால் வாக்குகளை முகந்தனூர் தபால்காரர் முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி முகந்தனூர் தி.மு.க.வினர் அந்த கட்சியை சேர்ந்த பிரபு என்பவர் தலைமையில் கொரடாச்சேரி மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story