மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.19.50 உயர்ந்தது
மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.19.50 உயர்ந்து உள்ளது.
மும்பை,
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொருத்தும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அடிப்படையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் முதல்தேதியையொட்டி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில் நேற்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 12 வழங்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட தேவைக்கு மானியம் இல்லாத சிலிண்டர்களைத்தான் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தியாக வேண்டும்.
விலை உயர்வு
மானியம் இல்லா சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலை நேற்று நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மும்பையில் ரூ.19.50 உயர்ந்து உள்ளது. இதனால் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.684.50 ஆக அதிகரித்து உள்ளது.
19 கிலோ எடை கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story