ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 வயது குழந்தை பலி


ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 2 Jan 2020 3:45 AM IST (Updated: 2 Jan 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லில், காவிரி ஆற்றில் மூழ்கி 3 வயது குழந்தை பலியானது.

பென்னாகரம்,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. விவசாயி. இவருடைய மனைவி சர்மிளா. இவர்களது மகன் பத்மசபரி (வயது 3). முனுசாமியின் உறவினர் இறந்து விட்டார். அவருடைய காரியத்திற்காக முனுசாமி, மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சென்றார்.

இவர்கள் அனைவரும் ஊட்டமலை நாடார் கொட்டாய் பகுதியில் இறந்தவருக்கு காரியம் செய்த பின்னர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். இதனால் முனுசாமி தனது மகனை அங்குள்ள ஒரு பாறை மீது அமரவைத்து விட்டு மனைவியுடன் குளிக்க சென்றார். அப்போது குழந்தை திடீரென பாறை மீது இருந்து கீழே இறங்கி காவிரி ஆற்றில் இறங்கியது. இதனால் குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டது.

உடல் மீட்பு

காவிரி ஆற்றில் குளித்து விட்டு முனுசாமி மற்றும் உறவினர்கள் வந்தபோது பாறை மீது அமர்ந்து இருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. அவர்கள் குளித்த இடத்தில் இருந்து 200 அடி தூரத்தில் காவிரி ஆற்றில் குழந்தை பத்மசபரியின் உடல் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், குழந்தையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்ளபதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். புத்தாண்டு அன்று பெற்றோருடன் ஒகேனக்கல்லுக்கு சென்ற குழந்தை காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story