திருவாரூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனந்த் ஆய்வு


திருவாரூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனந்த் ஆய்வு
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 AM IST (Updated: 2 Jan 2020 11:19 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்றது. முதல் கட்டமாக திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களுக்கும், 2-வது கட்டமாக நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடந்தது. மொத்தம் 10 ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 3,458 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

திருவாரூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 14 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 34 ஊராட்சி தலைவர்கள், 237 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 287 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை

வாக்குப்பதிவை தொடர்ந்து நேற்று அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திருவாரூர் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை திரு.வி.க. அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்னதாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள், வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்து சென்றனர். அங்கு முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதனை தொடர்ந்து ஊராட்சி வாரியாக பதிவான வாக்குகள் பல்வேறு சுற்றுகளாக எண்ணப் பட்டன.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஆனந்த் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர், வாக்கு எண்ணும் பணி குறித்த விவரங்களை அதிகாரி களிடம் கேட்டறிந்தார்.

Next Story