வாக்கு எண்ணும் மையத்தில் பெண் வேட்பாளரை போலீசார் தாக்கியதால் பரபரப்பு


வாக்கு எண்ணும் மையத்தில் பெண் வேட்பாளரை போலீசார் தாக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2020 4:45 AM IST (Updated: 3 Jan 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்தில் ஒன்றிய கவுன்சிலர் பெண் வேட்பாளரை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்தில் 21 வார்டுகள் உள்ளன. இதில் 20-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு செல்வராணி என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் வாக்குச்சீட்டில் அவரது சின்னம் பதிவாகவில்லை. இது பற்றி அவர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தேர்தலும் முடிந்துவிட்டது.

போலீசார் தாக்குதல்

நேற்று, இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குகள், அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எண்ணப்பட்டன. அப்போது, செல்வராணி வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து இருந்தார். அவர், வாக்குச் சீட்டில் தனது சின்னம் இல்லாததால், 21-வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டுகள் எண்ணக்கூடாது என கூறி, அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், வேட்பாளர் செல்ராணிக்கும், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பெண் போலீசார், செல்வராணியை கைகளால் தாக்கி, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே தள்ளினார்கள். இதனால் அந்த மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story