வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2020 3:30 AM IST (Updated: 3 Jan 2020 1:01 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வேல்சாமி (வயது 65). விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இவருடைய மனைவி காளியம்மாள். நேற்று முன்தினம் காளியம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வேல்சாமி திடீரென்று வி‌‌ஷம் குடித்தார். பின்னர் அவர், இதுகுறித்து சங்கரலிங்கபுரத்தில் உள்ள தன்னுடைய மகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று, வேல்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே வேல்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மனுவேல் (55) மீனவர். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, தன்னுடைய மனைவியிடம் கோபித்து கொண்டு, உடன்குடி அருகே மணப்பாடு அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள தன்னுடைய அண்ணன் அமல்ராஜின் வீட்டில் கடந்த சில நாட்களாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மனுவேல் தனது அண்ணனின் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த மனுவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story