தியாகதுருகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்


தியாகதுருகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2020 4:00 AM IST (Updated: 3 Jan 2020 1:01 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்டாச்சிமங்கலம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் தியாகதுருகம் வட்டார முத்தவல்லிகள் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் தியாகதுருகத்தில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு முத்தவல்லி அப்துல் சர்தார் தலைமை தாங்கினார். முத்தவல்லிகள் ‌‌ஷம்சுதீன், மஜ்கர், ர‌ஷீத், ஜான்பா‌ஷா, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை தலைவர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தவல்லி அப்துல் சமத் வரவேற்றார்.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, கடைவீதி வழியாக சென்று பஸ் நிலையத்தை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் பாரபட்சமா, பாரபட்சமா மதத்தின் பெயரில் பாரபட்சமா?, அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோ‌‌ஷமிட்டவாறு வந்தனர்.

இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்களும், தி.மு.க. கூட்டணி கட்சியினரும், முஸ்லிம் அமைப்பினரும் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ரி‌ஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், தி.மு.க. மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, மவுண்ட்பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணே‌‌ஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாறன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கபீர்பா‌ஷா, அப்துல்காதர், தாஜ்தீன், ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 25 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியை இளைஞர்கள் கையில் ஏந்தியவாறு நின்றனர். இதில் தி.மு.க. நகர கழக செயலாளர் பொன்.ராமகிரு‌‌ஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சதா.மகாலிங்கம், இளைஞர் அணி அமைப் பாளர் சிலம்பரசன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முரசொலி மாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பெரியசாமி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர் ஆஜாத், ஜமாத் தணிக்கையாளர் அக்பர் உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் கலையமுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் இலாஹி நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காததால், அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக 500 பெண்கள் உள்பட 650 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story