குடியுரிமை சட்ட போராட்டத்தில் கைதான பெண்ணுக்கு ஜாமீன்: 12 நாட்களுக்கு பிறகு தாயுடன் சேர்ந்த ஒரு வயது குழந்தை
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கைதான பெண்ணுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் அவரது 1 வயது குழந்தை 12 நாட்களுக்கு பின் தாயுடன் சேர்ந்துள்ளது.
வாரணாசி,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பெனியாபாக் பகுதியில் கடந்த டிசம்பர் 19-ந் தேதி ஏராளமானோர் போராட்டம் நடத்தினார்கள். அங்கு அப்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால், தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதில் சமூக ஆர்வலர் ஏக்தா சேகர், அவரது கணவர் ரவி சேகர் இருவரும் அடங்குவர். இவர்களுக்கு சுமார் 1 வயதில் (14 மாதங்கள்) சம்பக் எனும் பெண் குழந்தை உள்ளது. தனது தாய் ஷீலா திவாரியிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, ஏக்தா போராட்டத்துக்கு சென்றிருந்தார்.
போராட்டத்தில் பங்கேற்ற ஏக்தாவும், ரவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தாயை காணாமல் குழந்தை அழுதுகொண்டே இருந்தது.
இந்த நிலையில், ஏக்தா சேகர், ரவி சேகர் உள்ளிட்ட 56 பேரின் ஜாமீன் மனு நேற்று முன்தினம் வாரணாசி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் அவர்களுக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் ஜாமீன் உத்தரவு கிடைக்க கால தாமதம் ஏற்பட்டதால், ஏக்தாவின் குடும்பத்தினர் சிறைக்கு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் ஏக்தா-ரவி தம்பதியை நேற்று முன்தினம் மாலையில் ஜாமீனில் அனுப்ப சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை சிறையில் இருந்து ஏக்தாவும், அவரின் கணவரும் விடுவிக்கப்பட்டனர். கடந்த 12 நாட்களாக தாயை காணாமல் இருந்த ஏக்தாவின் ஒரு வயது குழந்தை அவரை கண்டவுடன் மகிழ்ச்சியில் தாவி கட்டியணைத்து முத்தமிட்டது.
இதைப்பார்த்த பெற்றோரும், உறவினர்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இது காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது.
இதுகுறித்து ஏக்தா சேகர் கூறுகையில், ``நான் இத்தனை நாட்கள் சிறையில் இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது குழந்தையை பிரிந்தது வேதனையாக இருந்தது. இப்போது என் மகள் என்னிடம் மகிழ்ச்சியாக இருக்கிறாள்’’ என்றார்.

Related Tags :
Next Story